பிரதமர் அலுவலகம்
ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ் சாப்லேக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2022 6:20PM by PIB Chennai
பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ் சாப்லேக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவினாஷ் சாப்லேயின் ராணுவத்துடனான தொடர்பு குறித்து குறிப்பிட்டுள்ள திரு மோடி, சாப்லேயுடனான தமது சமீபத்திய உரையாடலையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"அவினாஷ் சாப்லே ஒரு சிறந்த இளைஞர். ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராணுவத்துடனான தனது தொடர்பு, பல தடைகளை அவர் எவ்வாறு சமாளித்தார் என்பது பற்றிய எங்களின் சமீபத்திய உரையாடலைப் பகிர்ந்து கொள்கிறோம். அவரது வாழ்க்கைப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது. "
***
(வெளியீட்டு அடையாள எண்: 1849159)
வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam