பிரதமர் அலுவலகம்

ரேஸ் வாக்கிங் சாம்பியன் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 06 AUG 2022 6:18PM by PIB Chennai

பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரேஸ் வாக்கிங் சாம்பியன் பிரியங்கா கோஸ்வாமிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"நமது தேசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். இந்தப் பதக்கத்தின் மூலம், இந்தியாவில் உள்ள பல இளைஞர்களை இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்துள்ளார். வரும் காலங்களில் அவர் வெற்றியின் புதிய உயரங்களை எட்டட்டும். #Cheer4India".

***



(Release ID: 1849157) Visitor Counter : 141