பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற எம். ஸ்ரீசங்கருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 05 AUG 2022 9:40AM by PIB Chennai

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற எம். ஸ்ரீசங்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் எம். ஸ்ரீசங்கர் பெற்றுள்ள வெள்ளிப் பதக்கம் சிறப்புமிக்கது. பல தசாப்தங்களுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான நீளம்  தாண்டுதல் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அவரது செயல்திறன், இந்திய விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்திற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது. அவருக்கு நல்வாழ்த்துகள். அவரது சிறப்பான செயல்திறன் வருங்காலத்திலும் தொடரட்டும்.”

***************

(Release ID: 1848573)

 


(வெளியீட்டு அடையாள எண்: 1848604) வருகையாளர் எண்ணிக்கை : 206