பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் டேபிள் டென்னிசில் தங்கப் பதக்கம் வென்ற ஜி. சத்தியன், ஹர்மித் தேசாய், ஷரத் கமல், சனில் ஷெட்டி ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 02 AUG 2022 9:17PM by PIB Chennai

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் டேபிள் டென்னிசில்  தங்கப் பதக்கம் வென்ற ஜி. சத்தியன், ஹர்மித் தேசாய், ஷரத் கமல், சனில் ஷெட்டி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“டேபிள் டென்னிசில் அபாரம்! காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஜி. சத்தியன், ஹர்மித் தேசாய், ஷரத் கமல், சனில் ஷெட்டி ஆகியோருக்கு வாழ்த்துகள். திறனிலும்,  உறுதியிலும் இந்தக் குழு உயரிய வரையறைகளை அமைத்துள்ளது. வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

***

 

(Release ID: 1847606)


(Release ID: 1847747) Visitor Counter : 130