பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சபர்கந்தாவின், சபர் பால்பண்ணையில் ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பலவகை திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்

Posted On: 28 JUL 2022 2:34PM by PIB Chennai

குஜராத்தின் சபர்கந்தா, கதோடா சவுக்கியில் உள்ள சபர் பால்பண்ணையில் ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பலவகை  திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள், உள்ளூர் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் அதிகாரம் அளிப்பதோடு  அவர்களின் வருவாயையும் அதிகரிக்கும். இந்த பிராந்தியத்தில் ஊரக பொருளாதாரத்திற்கு இது ஊக்கமளிக்கும்.  சுகன்யா  ஸ்மிருதி திட்ட பயனாளிகள் மற்றும் முன்னிலை வகிக்கும் பெண் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோரை பிரதமர் பாராட்டினார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், தற்போது சபர் பால்பண்ணை விரிவாக்கப்பட்டுள்ளது. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. நவீன  தொழில்நுட்பத்துடன் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுவதால், சபர் பால் பண்ணையின் திறன் மேலும் கூடுதலாகும் என்றார். மேலும் சபர் பால்பண்ணையின் நிறுவனர்களில் ஒருவரான திரு பூராபாய் படேலை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த பகுதி மற்றும் உள்ளூர் மக்களுடனான தமது நீண்ட தொடர்பையும் நினைவு கூர்ந்தார். 

தாம் முதலமைச்சராக இருந்தபோது மக்களின் ஒத்துழைப்பை பட்டியலிட்ட அவர், இந்தப் பகுதியின் நிலைமையை மேம்படுத்த  முயற்சி செய்ததை எடுத்துரைத்தார். இந்த முயற்சிகளின் முக்கிய அம்சமாக இருந்தவை கால்நடை வளர்ப்பும், பால் பண்ணை தொழிலும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  கால்நடை தீவனம், மருந்து ஆகியவற்றை வழங்குவதன் மூலம், கால்நடை பராமரிப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும், கால்நடைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையை ஊக்கப்படுத்தியது பற்றியும் அவர் பேசினார்.

கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் குஜராத்தின் பால்வளச் சந்தை ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது என்று பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் தமது பயணத்தின் போது பெண்களின் பங்கேற்பை அதிகப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததை அவர் நினைவு கூர்ந்தார். தற்போது பெரும்பாலான குழுக்களில் பெண்களின்  பிரதிநிதித்துவம் நன்றாக உள்ளது என்றும் பாலுக்கு வழங்கப்படும் தொகை பெரும்பாலும் பெண்கைள சேர்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

----

(Release ID 1845793)


(Release ID: 1845904) Visitor Counter : 210