பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav g20-india-2023

பிரேசிலில் BM-SEAL-11 திட்ட மேம்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் நிறுவனம் மூலம் கூடுதல் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 JUL 2022 5:17PM by PIB Chennai

பிரேசிலில் BM-SEAL-11 திட்ட மேம்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (BPCL) துணை நிறுவனமான பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் நிறுவனம் மூலம் (BPRL) 1,600 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 12,000 கோடி) அளவிற்கு கூடுதல் முதலீடு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

BM-SEAL-11 திட்டத்தின் மூலமான உற்பத்தி 2026-27 ஆம் நிதியாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை இது வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. பிரேசிலிலிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செய்ய முடியும். இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு இதன் மூலம் மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845424

***************(Release ID: 1845590) Visitor Counter : 134