பிரதமர் அலுவலகம்
ஜூலை 7-ஆம் தேதி பிரதமர் வாரணாசி பயணம்
प्रविष्टि तिथि:
04 JUL 2022 6:35PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 7-ஆம் தேதி வாரணாசி செல்லவிருக்கிறார். பிற்பகல் 2 மணி அளவில், வாரணாசியின் எல்.டி. கல்லூரியில் சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திறன் உள்ள அக்ஷய பாத்திர மதிய உணவு சமையல் கூடத்தை பிரதமர் திறந்து வைப்பார். அதைத்தொடர்ந்து பிற்பகல் 2:45 மணிக்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையமான ருத்ராக்ஷ் செல்லும் பிரதமர், தேசியக் கல்விக் கொள்கையின் அமலாக்கம் குறித்த அகில இந்திய கல்வி கூட்டத்தைத் தொடங்கி வைப்பார். பிறகு மாலை 4 மணிக்கு சிக்ராவில் உள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் ரூ. 1800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் வாரணாசியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பிரதமர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் விளைவாக அந்த நகரத்தின் நிலத்தோற்றம் வெகுவாக மாற்றமடைந்துள்ளது. மக்களுக்கு எளிதான வாழ்வை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
சிக்ராவின் டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் ரூ. 590 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைப்பார். வாரணாசி திறன்மிகு நகரம் மற்றும் நகர்ப்புற திட்டங்களின் கீழ் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் இதில் அடங்கும். மேலும் சுமார் ரூ. 1200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் ஜூலை 7 முதல் 9-ஆம் தேதி வரை மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள அகில இந்திய கல்வி கூட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ முறைப்படி அமல்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றி கல்வியாளர்கள், கொள்கை தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான ஓர் தளமாக இந்நிகழ்ச்சி அமையும். பன்முகத்தன்மை மற்றும் முழுமையான கல்வி; திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு; ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்முனைவு; தரமான கல்வி வழங்க ஆசிரியர்களுக்கு திறன் கட்டமைப்பு; தரம், மதிப்பீடு மற்றும் அங்கீகாரம்; மின்னணு வளர்ச்சி மற்றும் இணையவழி கல்வி; சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி; இந்திய அறிவு முறை மற்றும் உயர்கல்வியை சர்வதேசமயமாக்கல் உள்ளிட்ட கருப்பொருட்களில் குழு விவாதங்கள் நடைபெறும்.
***************
(रिलीज़ आईडी: 1839295)
आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam