பிரதமர் அலுவலகம்

பிஎஸ்எல்வி சி-53 மூலம் இந்திய விண்வெளி புதிய தொழில் நிறுவனங்களின் இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவிற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 01 JUL 2022 9:20AM by PIB Chennai

பிஎஸ்எல்வி சி-53 மூலம் இந்திய விண்வெளி புதிய தொழில் நிறுவனங்களின் இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக  செலுத்தியதற்காக இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“இந்திய விண்வெளி புதிய தொழில் நிறுவனங்களின் இரண்டு செயற்கைக்கோள்களை  விண்ணில் செலுத்தியிருப்பதன் வாயிலாக பிஎஸ்எல்வி சி-53 புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதனை சாத்தியமாக்கிய @இன்ஸ்பேஸ்இண்ட் மற்றும் @ இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் விண்வெளியை எட்டும் என்று நம்புகிறேன்.”

***************(Release ID: 1838482) Visitor Counter : 147