பிரதமர் அலுவலகம்
ஜூன் 26, 2022 அன்று ஒலிபரப்பப்பட்ட ‘மனதின் குரல்' நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நமோ செயலியில் இடம்பெற்றுள்ள வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUN 2022 9:10PM by PIB Chennai
ஜூன் 26, 2022 அன்று ஒலிபரப்பப்பட்ட ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நமோ செயலியில் இடம்பெற்றுள்ள வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம், ‘கழிவிலிருந்து வளம்’ என்பதை நோக்கிய கூட்டு முயற்சிகள், நம் தடகள வீரர்களின் சாதனைகள் உள்ளிட்ட ஏராளமான தலைப்புகள் இந்த மாத ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்ததாக திரு மோடி கூறியுள்ளார்.
பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில்,
“இந்த மாத #MannKiBaat நிகழ்ச்சியில், விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம், ‘கழிவிலிருந்து வளம்’ என்பதை நோக்கிய கூட்டு முயற்சிகள், நம் தடகள வீரர்களின் சாதனைகள் உள்ளிட்ட ஏராளமான தலைப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஓர் வினாடி வினா போட்டி நமோ செயலியில் உள்ளது. அதில் பங்கேற்கவும்”, என்று தெரிவித்தார்.
***************
(Release ID: 1838115)
(வெளியீட்டு அடையாள எண்: 1838143)
வருகையாளர் எண்ணிக்கை : 195
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam