பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ ராம் பகதூர் ராயின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
18 JUN 2022 9:57PM by PIB Chennai
வணக்கம்..
மக்களை ஊக்குவிப்பதற்காக, 'சாரிவேதி-சாரிவேதி' என்ற மந்திர சொல்லை முனிவர்கள் நமக்கு தந்தனர்.
இந்த மந்திர சொல்லானது ஒரு செய்தியாளனுக்கு, புதிய விஷயங்களை தேடுவது, நாட்டுக்கு புதிதாக ஒன்றை தர வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாகவே ஏற்படுத்தும். ராம் பகதூர் ராய் அவர்கள், தனது வாழ்நாளில் இதுபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். “பாரதிய சம்விதான் அன்கஹி கஹானி” என்ற இந்த நூல் அதன் தலைப்புக்கு ஏற்றவாறே, இந்திய அரசியலமைப்பு குறித்த பார்வையை நாட்டுக்கு முன் வைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நாவலை எழுதியதற்காக ராம் பகதூர் ராய் அவர்களையும், அதன் வெளியீட்டாளர்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
நீங்கள் அனைவரும் அறிவார்ந்த சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். இந்த நூலை வெளியிட நீங்கள் ஒரு நல்ல நாளையும், நேரத்தையும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இந்தக் காலம் தேச சுதந்திரதினத்தின் அமிர்த காலம் ஆகும். ஜூன் 18, இந்திய ஜனநாயகத்தின் முதல்நாளை குறிக்கும், உண்மையான அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் அப்போதைய பிரதமர் ராஜேந்திர பிரசாத் கையெழுத்திட்டார். இந்த சிறந்த நாளில், அரசியலமைப்பை ஒரு சிறந்த கண்ணோட்டத்தில் அலசும் இந்த நூலை வெளியிடுகிறோம். இது நம் அரசியலமைப்பின் பலமாகும். இது பல்வேறு கருத்துகளையும், உண்மைகளையும் அறிவதற்கும், அதுதொடர்பான ஆராய்ச்சிக்கும் நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது.
நண்பர்களே,
நம் நாட்டின் பல தலைமுறைகளின் கனவை நனவாக்கும் சுதந்திர இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் நமது அரசியலமைப்பு நம் முன் வைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் முதல்கூட்டம், சுதந்திரம் அடைவதற்கு பல மாதங்களுக்கு முன், 1946 டிசம்பர் 9-ம் நாள் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னணியில், பல்வேறு வரலாற்று சம்பவங்களும், காலங்களும், சூழ்நிலைகளும் இருந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆனால், இதன் பின்னணியில் நான் ஒரு உணர்வுப்பூர்வமான விஷயத்தையும் பார்க்கிறேன். அது ஒரு நிலையற்ற காலம். நமது சுதந்திர போராட்டம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், சுதந்திரத்தின்மீது அளவற்ற நம்பிக்கை இருந்தது. அதன் நம்பிக்கை மிகவும் உறுதியாளது. சுதந்திரத்துக்கு பல நாட்களுக்கு முன்பாகவே நமது நாடு சுதந்திரத்துக்கு தயாராகி விட்டது. மேலும், அதற்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான விவாதங்களையும் தொடங்கி விட்டது. இது இந்திய சுதந்திரம் பற்றிய ஒரு புத்தகம் மட்டுமல்ல, அர்ப்பணிப்பு உணர்வு, சுதந்திரத்தின் மீதான நம்பிக்கை என்பதையும் காட்டுகிறது.
நண்பர்களே,
இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலம் கொண்டாடப்படும் நேரத்தில், சுதந்திரத்தின் சொல்லப்படாத பக்கங்களை வெளிக்கொண்டு வருவதில் தேசம் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எல்லாவற்றையும் தியாகம் செய்தும் மறக்கப்பட்ட வீரர்கள், சுதந்திர போராட்டத்துக்கு புதிய வழியை காட்டிய பின்னரும் மறக்கடிக்கப்பட்ட நிகழ்வுகள், சுதந்திர போராட்டதுக்கான ஆற்றலுக்கு வித்திட்ட சிந்தனைகள் தற்போது தூரமாகி விட்டன. கடந்தகால உணர்வுகள், எதிர்கால இந்தியாவில் வலுப்பெறும் வகையில், தற்போது நாம் அவர்களை இணைத்து வருகிறோம். எனவே, நம் இளைஞர்கள் தற்போது சொல்லப்படாத, மறக்கப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து புத்தகங்களை எழுதி வருகின்றனர். சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “பாரதிய சம்விதான் அன்கஹி கஹானி” என்ற இந்த நூல் இந்த பிரச்சாரத்தில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். சுதந்திர வராற்றுடன், நமது அரசியலமைப்பின் சொல்லப்படாத அத்தியாயங்கள், நம் இளைஞர்களுக்கு புதிய சிந்தனையை தருவதுடன், புதிய உரையாடல்களையும் உருவாக்கும்.
நண்பர்களே,
இந்தியா இயல்பாகவே சுதந்திர சிந்தனை கொண்ட நாடாக உள்ளது. மந்த நிலை என்பது நமது இயல்பு அல்ல. அரசியலமைப்பு சபையின் உருவாக்கம் முதல் அதன் விவாதங்கள் வரை, அரசியலமைப்பை ஏற்று கொண்டது முதல் அதன் தற்போதைய நிலை வரை, நாம் தொடர்ந்து ஆற்றல்மிக்க, முற்போக்கான அரசியலமைப்பை கண்டுள்ளோம். பல்வேறு கேள்விகளை எழுப்பி, விவாதம் செய்து மாற்றங்களை செய்திருக்கிறோம். இதன் தொடர்ச்சி நம் மக்கள் மனதிலும் நிலைத்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, முன்பைவிட சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம். இதேவழியில், நாட்டு மக்கள் அனைவரும் இந்த வேகத்தை முன்னெடுப்பார்கள். இந்த நம்பிக்கையுடன் அனைவருக்கும் மிக்க நன்றி..
***************
Release ID: 1835167)
(Release ID: 1835455)
Visitor Counter : 156
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam