நிதி அமைச்சகம்
அமிர்தப் பெருவிழா வாரத்தின் ஒருபகுதியாக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை நடைபெறும்
प्रविष्टि तिथि:
07 JUN 2022 7:11AM by PIB Chennai
75-வது ஆண்டு சுதந்திரத்தைக் குறிக்கும் அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு, மத்திய நிதி அமைச்சகத்தின், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பாக, போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை(08.06.2022) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் 14 இடங்களில், 42,000 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட உள்ளது.
மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், கவுஹாத்தி, லக்னோ, மும்பை, முந்த்ரா, கண்ட்லா, பாட்னா மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களில் அழிக்கப்படவுள்ள போதைப்பொருட்கள் அழிப்புப் பணியை காணொலி வாயிலாக பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், அதிகாரிகளுடன் உரையாற்றவுள்ளார்.
***************
Release ID: 1831686
(रिलीज़ आईडी: 1831739)
आगंतुक पटल : 345