நிதி அமைச்சகம்
மே 2022-ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டைவிட 44% அதிகரித்து ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது
Posted On:
01 JUN 2022 1:28PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மொத்த வருவாய் மே 2022-ல் ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டி-யாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக ரூ.73,345 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.37,469 கோடி உட்பட) செஸ் வரியாக 10,502 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.931 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.27,924 கோடியும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.23,123 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. இதற்கு பிறகு மே மாதத்தில் மத்திய அரசுக்கான மொத்த வருவாயாக ரூ.52,960 கோடியும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.55,124 கோடியும் கிடைத்துள்ளது. இது தவிர ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 31.05.2022 நிலவரப்படி ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மே 2022-ல் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைவிட 44% அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நான்காவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மே 2021-ல் ரூ.5,592 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் மே 2022–ல் 41% அதிகரித்து ரூ.7,910 கோடி வசூலாகியுள்ளது. புதுச்சேரியில், மே 2021-ல் 123 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், மே 2022-ல் 47% அதிகரித்து ரூ.181 கோடி வசூலாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830039
----
(Release ID: 1830073)
Visitor Counter : 329
Read this release in:
English
,
Malayalam
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada