தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
17-வது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உரை
Posted On:
25 MAY 2022 4:41PM by PIB Chennai
17-வது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது, கொவிட் 19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காலத்தில் இந்திய ஊடகங்கள் ஆற்றிய சிறப்பான பங்கை பாராட்டினார். கொவிட் தொற்று தொடர்பான விழிப்புணர்வு செய்திகள், பெருந்தொற்று பரவலை தடுக்க இந்திய அரசின் முக்கிய வழிகாட்டுதல்கள், மருத்துவர்களின் இலவச ஆலோசனைகள் அனைவரையும் சென்றடைவதை இந்திய ஊடகங்கள் உறுதி செய்ததாக அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். தொலைக்காட்சியும், அகில இந்திய வானொலியும், உடனடி மற்றும் நேரடி தகவல்கள், அடிப்படை செய்திகள் மற்றும் பொதுசுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து ஒலிபரப்பியதன் மூலம் தங்களின் பங்களிப்பை நிரூபித்ததாக தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான சவாலான போராட்டத்தில் இந்திய அரசின் சாதனைகளை அமைச்சர் அனுராக் தாக்கூர் எடுத்துரைத்தார்.
1.3 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவது சவால்மிக்க செயலாக இருந்தாலும், சுகாதாரத்துறை ஊழியர்கள், சமூக நலப்பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தியா பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்தப் பணியில் இந்திய ஊடகங்கள் முக்கிய பங்களிப்பை செய்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
***************
(Release ID: 1828296)
Visitor Counter : 168