பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய, ஜப்பானிடையேயான துடிப்பான உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து

Posted On: 23 MAY 2022 9:07AM by PIB Chennai

 

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார். தனது அதிகாரப்பூர்வ ஜப்பான் பயணம் குறித்து, அந்நாட்டின் உள்ளுர் செய்தித்தாள் ஒன்றில் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் செய்தியில், “இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான துடிப்பான உறவுகள் குறித்து எழுதினேன். எங்களிடையேயான உறவு அமைதி, நிலைத்தன்மை, செழுமைக்கான கூட்டு. புகழ்மிக்க 70 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் எங்கள் நட்பின் பயணத்தை நான் கண்டறிந்துள்ளேன்.

கோவிடுக்கு பிந்தைய உலகில், இந்தியா, ஜப்பான் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இருநாடுகளும் உள்ளன. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் நிலையான, பாதுகாப்பான தூண்களாக இரண்டு நாடுகளும் உள்ளன. பல்வேறு துறைகளிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

குஜராத் முதல்வராக நான் இருந்த நாட்களிலிருந்தே ஜப்பானிய மக்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு தொடர்ச்சியாக கிடைத்துள்ளது.

ஜப்பானின் முன்னேற்றங்களும், வளர்ச்சியும் எப்போதும் போற்றத்தக்கவை. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதுமை, புதிய தொழில்கள் தொடங்குவது உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஜப்பான், இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

***************

 


(Release ID: 1827626) Visitor Counter : 186