பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
540 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள க்வார் புனல்மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
27 APR 2022 5:01PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ.4526.12 கோடி முதலீட்டில்
540 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள க்வார் புனல்மின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய புனல் மின் கழகம், ஜம்மு காஷ்மீர் மாநில மின் உற்பத்தி மேம்பாட்டு கழகமும், செனாப் பள்ளத்தாக்கு மின் உற்பத்தி திட்டத்திற்கான தனியார் நிறுவனமும் இணைந்து இதனை அமலாக்கும். இதில் 51 சதவீதம் தனியார் பங்களிப்பாகவும், 49 சதவீதம் அரசு கழகங்களின் பங்காகவும் இருக்கும்.
இந்த மின் திட்டம் ஆண்டுக்கு 1975.54 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.
இந்தத் திட்டத்திற்கு அடிப்படை கட்டமைப்பு செலவுக்காக மத்திய அரசு ரூ.69.80 கோடி மானியமாக வழங்குகிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உதவியாக ரூ.655.08 கோடி மானியமாக வழங்கப்படும். இந்த மின் திட்டம் 54 மாதக்காலத்தில் செயல்படத்தொடங்கும்.
இதன் மூலம் 2500 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
***************
(Release ID: 1820656)
Visitor Counter : 192
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada