பிரதமர் அலுவலகம்

இமாச்சல் தினத்தன்று பிரதமரின் செய்தி

"இமாச்சலப் பிரதேச மக்கள் சவால்களை வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறார்கள்"

"கிராமப்புற சாலைகளை நீடித்தல், நெடுஞ்சாலை விரிவாக்கம், ரயில்வே இணைப்புகளின் முன்முயற்சி 'இரட்டை என்ஜின் அரசால்' எடுக்கப்பட்டதன் பயன்கள் இப்போது கண்கூடாகத் தெரிகின்றன"

"நேர்மையான தலைமை, அமைதியை விரும்பும் சூழல், ஆண் மற்றும் பெண் கடவுள்களின் ஆசீர்வாதம், கடினமாக உழைக்கும் இமாச்சல் மக்கள் இவையெல்லாம் ஒப்பில்லாதவை. விரைவான வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்தையும் இமாச்சல் கொண்டிருக்கிறது"

Posted On: 15 APR 2022 12:53PM by PIB Chennai

75வது அமைப்பு தினத்தன்று இமாச்சல பிரதேச மக்களுக்குத் தமது செய்தியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் 75வது ஆண்டும் அமைப்பு தினத்தின் 75வது ஆண்டும் ஒரே நேரத்தில் வந்திருப்பது மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுப் பெருவிழாவின் போது வளர்ச்சியின் பயனை இம்மாநிலத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் கொண்டு செல்ல உறுதியேற்றிருப்பதாக அவர் கூறினார்.

தனிப்பட்ட முறையிலான குறிப்பு ஒன்றை தெரிவித்த பிரதமர், திரு அடல் பிகாரி வாஜ்பாய் எழுதிய கவிதையை மேற்கோள் காட்டினார். உறுதியான துடிப்புமிக்க மக்களைக் கொண்ட இந்த அழகான மாநிலத்துடன்
தமது நீண்டகால தொடர்பையும் அவர் நினைவுகூர்ந்தார்.
1948ல் இதன் உருவாக்க காலத்தில் இந்த மலை மாநிலம் கொண்டிருந்த சவால்களை நினைவுகூர்ந்த பிரதமர், இமாச்சலப் பிரதேச மக்கள் சவால்களை வாய்ப்புகளாக மாற்றியதற்குப் பாராட்டு தெரிவித்தார். தோட்டக்கலை, உபரி மின்சாரம், எழுத்தறிவு விகிதம், கிராமப்புற சாலைத் தொடர்பு, குடிநீர் குழாய், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற மாநிலத்தின் சாதனைகளை அவர் பாராட்டினார். கடந்த 7-8 ஆண்டுகளில் இந்த சாதனைகளை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அவர் கோடிட்டுக் காட்டினார். ஜெயராம் அவர்களின் இளம் தலைமைத்துவத்தின் கீழ் 'இரட்டை எஞ்சின் அரசு' கிராமப்புற சாலைகளை நீடித்தல், நெடுஞ்சாலைகளை விரிவாக்குதல், ரயில்வே இணைப்புகளை அதிகரித்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதன் பயனை இப்போது கண்கூடாக காண்கிறோம். போக்குவரத்துத் தொடர்புகள் சிறப்பாக அமைந்த நிலையில் ஏமாற்றத்தின் சுற்றுலா புதிய பகுதிகளுக்கும் புதிய பிராந்தியங்களுக்கும் சென்றுள்ளது" என்று பிரதமர் கூறினார். சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், புதிய வாய்ப்புகளின் வாசல்களையும் உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்பையும் பிரதமர் எடுத்துரைத்தார். பெருந்தொற்று காலத்தில் திறமையுடனும் துரிதமாகவும் தடுப்பூசி செலுத்தியது பற்றி பேசியதன் மூலம் சுகாதார துறையின் முன்னேற்றத்தை அவர் சிறப்புடன் குறிப்பிட்டார்.

இமாச்சலப் பிரதேசத்தின் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வருவதற்குக் கடின உழைப்பின் தேவையைப் பிரதமர் வலியுறுத்தினார். அமிர்த காலத்தில் சுற்றுலா, உயர்கல்வி, ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள துடிப்புமிக்க கிராமம் என்ற திட்டம் இமாச்சலப் பிரதேசத்திற்கு நல்ல பயனை அளிக்கும் என்று அவர் கூறினார். போக்குவரத்து தொடர்பு அதிகரித்திருப்பது, வனங்கள் செழுமையாகியிருப்பது, தூய்மை, இந்த முயற்சிகளில் மக்களின் பங்களிப்பு ஆகியவற்றையும் அவர் தொட்டுக்காட்டினார்.

முதலமைச்சரும் அவரது குழுவினரும் மத்திய அரசின் நலத்திட்டங்களை குறிப்பாக சமூக பாதுகாப்பு திட்டங்களை விரிவாக்கி இருப்பதற்காக பிரதமர் பாராட்டு தெரிவித்தார். "நேர்மையான தலைமைத்துவம், அமைதி விரும்பும் சூழல், ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் ஆசீர்வாதங்கள், இமாச்சல் மக்களின் கடின உழைப்பு இவை அனைத்தும் ஒப்பில்லாதவை. துரித வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்தையும் இமாச்சல் கொண்டிருக்கிறது என்று கூறி திரு மோடி உரையை நிறைவு செய்தார்.

******

 



(Release ID: 1817052) Visitor Counter : 166