மத்திய அமைச்சரவை
செபி மற்றும் கனடாவின் மணிடோபா செக்யூரிட்டீஸ் ஆணையத்திற்கிடையேயான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2022 3:28PM by PIB Chennai
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, கனடாவின் மணிடோபா செக்யூரிட்டி ஆணையம் இடையேயான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பலன்கள்:
பத்திரங்கள் ஒழுங்குமுறைகளில் எல்லை தாண்டிய ஒத்துழைப்புக்கு முறையான அடிப்படையை புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடுவதோடு, பரஸ்பர உதவியை எளிதாக்கி, மேற்பார்வை செயல்பாடுகளின் திறமையான செயல்பாட்டிற்கு பங்களித்து, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த உதவுவதோடு சட்டங்களை திறம்பட செயல்படுத்த உதவுகிறது. பத்திர சந்தைகளை நிர்வகிக்கும் விதிமுறைகளிலும் இது உதவுகிறது. செபி உடன் பதிவு செய்வதற்கு மணிடோபாவை சேர்ந்த முதலீட்டாளர்களை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தகுதியுடையதாக்கும்.
தாக்கம்:
கனடாவின் மணிடோபா மாகாணத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள், செபியில் வெளிநாட்டு சமபங்கு முதலீட்டாளராக பதிவு செய்ய விரும்புகின்றன. இந்த ஒப்பந்தம் அதற்கு வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816364
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1816419)
வருகையாளர் எண்ணிக்கை : 259
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam