பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வாலிமு நைரேரேயின் 100-வது பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2022 1:16PM by PIB Chennai

மகத்தான தலைவரும், இந்தியாவின் நண்பருமான வாலிமு நைரேரேயின் 100-வது பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். வாலிமு நைரேரேயின் கோட்பாடுகளான ஒற்றுமை, சமத்துவம் ஆகியவை இன்றும் பொருத்தம் உள்ளவையாக இருக்கின்றன என்று திரு மோடி கூறியுள்ளார். அவரது வாழ்க்கையும், பணியும் நம் அனைவருக்கும் நிலைத்த ஊக்குவிப்பாக இருக்கும் என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.

 பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“வாலிமு நைரேரேயின் வாழ்க்கையும், பணியும் நம் அனைவருக்கும் நிலைத்த ஊக்குவிப்பாக இருக்கும். அவர் முன்மொழிந்த ஒற்றுமை, சமத்துவம் ஆகியவை இன்றும் பொருத்தம் உள்ளவையாக இருக்கின்றன. மகத்தான தலைவரும், இந்தியாவின் நண்பருமான வாலிமு நைரேரேயின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு எனது புகழஞ்சலி.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1816353) வருகையாளர் எண்ணிக்கை : 245