வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

11 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் உள்நாட்டு காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் எண்ணிக்கை சர்வதேச காப்புரிமை தாக்கலை விட ஜனவரி் – மார்ச் 2022 காலத்தில் அதிகரித்துள்ளது


டிபிஐஐடி-ன் தொடர் முயற்சிகளுக்கு திரு பியூஷ் கோயல் பாராட்டு

Posted On: 12 APR 2022 10:11AM by PIB Chennai

இந்தியா மற்றொரு சாதனையை காப்புரிமை தாக்கலில் நிகழ்த்தியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் எண்ணிக்கை, 2022 ஜனவரி முதல் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், சர்வதேச காப்புரிமை தாக்கலின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 19,796 விண்ணப்பங்களில் 10,706 விண்ணப்பங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாகும்.  9090 விண்ணப்பங்கள் இந்தியாவைச் சேராதோர் தாக்கல் செய்தவை.

 தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை டிபிஐஐடி இந்த விஷயத்தில் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.  அறிவுசார் சொத்துரிமையை வலுப்படுத்துவதில் டிபிஐஐடி மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அறிவுசார் சொத்துரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக புத்தாக்க குறியீடு தரவரிசையில் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற வேண்டும் என்ற லட்சியத்தை நெருங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815852

***************



(Release ID: 1815978) Visitor Counter : 497