பிரதமர் அலுவலகம்
தேர்வு குறித்த விவாதத்தின் மீது ஆர்வம் மிகுந்திருப்பதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAR 2022 10:05AM by PIB Chennai
இந்த ஆண்டின் தேர்வு குறித்த விவாதத்திற்குத் தங்களின் மதிப்புமிகு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள லட்சக்கணக்கான மக்களின் ஆர்வமிகுதிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தேர்வு குறித்த விவாதத்திற்குப் பங்களிப்பு செய்துள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இந்த ஆண்டின் தேர்வு குறித்த விவாதத்திற்கு காட்டப்பட்டுள்ள ஆர்வம் சிறப்பானது. லட்சக்கணக்கானோர் தங்களின் மதிப்புமிகு கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். இதற்குப் பங்களிப்பு செய்திருக்கும் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
ஏப்ரல் 1 அன்று நிகழ்ச்சியை எதிர்பார்த்திருங்கள்.”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1811255)
வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam