பிரதமர் அலுவலகம்

குஜராத்தின் அகமதாபாத் எஸ்ஜிவிபி குருகுலத்தில் நடைபெற்ற பாவ் வந்தனா விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 20 MAR 2022 10:30PM by PIB Chennai

ஜெய் சுவாமிநாராயண்!
புனிதத்  துறவிகளே, சகோதர, சகோதரிகளே, இன்று பாவ் வந்தனாவில் ஹோலிப்  பண்டிகையை நான் பார்க்கிறேன். 
சிறந்த ஆளுமைகளின் வரலாறுகளும், கதைகளும், எழுத்தால் பதிவு செய்யப்படுவதைவிட, வாய்வழியாக கேட்பது என்றும் நினைவில் நிற்கும்.  பூஜ்ய சாஸ்திரி மகராஜின் வாழ்க்கை வரலாறு சமூகத்தில் சேவைக்காக அர்ப்பணிப்பு செய்யப்பட்ட ஆளுமையின் சுயநலமற்ற வாழ்க்கை முறையைத்  தெரிவிப்பதாக உள்ளது.
குருகுலப்  பாரம்பரியம், கலாச்சாரம், சமூகம்  ஆகியவை நாட்டின் சாதாரண மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.  சாஸ்திரிஜி தமது குருகுலம் வாயிலாக உலகம் முழுவதும் பலதரப்பட்ட நபர்களின் வாழ்க்கை முறையைப்  பண்படுத்தியுள்ளார்.  அவருடைய வாழ்க்கை முறைக்  கற்பித்தல்  உத்தரவிடுதலாக மட்டும் நின்று விடாமல், கடமையைச்  செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் அவர்  உபதேசித்தார். 
தூய்மை என்பது அனைவரது வாழ்க்கை முறையாகவும் இருக்க வேண்டும். குருகுலத்தில் மட்டும் தூய்மை இருந்தால் போதாது. ஆலயங்களிலும் அது இருக்க வேண்டும். ஒற்றைப்  பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். பாபாசாகிப் அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, பகத்சிங் ஆகியோரது சிலைகளைத்  தூய்மையாகப் பராமரிப்பது அவசியமாகும். கடவுளின் பிரசாதத்தை ஏன் நாம் பிளாஸ்டிக் பைகளில் வழங்க வேண்டும்?
நமது ஆளுநர் ஆச்சார்ய தேவ விரத் இயற்கை வேளாண்மைக்காக குரல் கொடுத்து வருகிறார். பூமி நமது தாய். நமது தாய்க்கு தொண்டாற்றுவது நமது கடமை அல்லவா? இன்னும் எவ்வளவு நாளைக்கு நாம் 
பூமித் தாய்க்கு விஷம் கொடுத்து அவளைத்  துன்புறுத்துவோம் என சாஸ்திரிஜி மகாராஜ் கேட்டார்?
இரசாயனங்களில் இருந்து நமது பூமியை நாம் விடுவிக்க வேண்டும். இயற்கை வேளாண்மையை குருகுலத்தில் கற்பிக்க வேண்டும். குருகுல மாணவர்கள் கிராமங்களுக்குச்  சென்று, விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஜெய் ஶ்ரீ சுவாமிநாராயண்!

****************



(Release ID: 1809994) Visitor Counter : 127