பிரதமர் அலுவலகம்
பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்து சாதித்திருப்பதற்காக விவசாயிகள், நெசவாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், பொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
23 MAR 2022 9:58AM by PIB Chennai
பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை குறித்த காலத்திற்கு 9 நாள் முன்னதாகவே அடைந்திருப்பதற்காக விவசாயிகள், நெசவாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், பொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதன் முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்து அதனை அடைந்துள்ளது. இந்த வெற்றிக்காக நமது விவசாயிகள், நெசவாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், பொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை நான் பாராட்டுகிறேன்.
நமது தற்சார்பு இந்தியா பயணத்தில் இதுவொரு முக்கிய சாதனையாகும். #உள்ளூர் பொருட்கள் உலகளவில் செல்கிறது”
****
(Release ID: 1808590)
Visitor Counter : 202
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada