பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி, கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா அமோலோ ஒடிங்கா இடையிலான சந்திப்பு
Posted On:
13 FEB 2022 2:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தற்போது தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு இந்தியாவில் உள்ள கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா அமோலோ ஒடிங்காவை இன்று சந்தித்தார். பத்தாண்டுகளாக உள்ள தனிப்பட்ட உறவுகள் பற்றி இருதலைவர்களும் தங்கள் நட்புறவை பரிமாறிக்கொண்டனர்.
சுமார் மூன்றரை ஆண்டுக்குப் பின்னர், திரு ஒடிங்காவைச் சந்தித்தது பற்றி பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டார். 2008 முதல் இந்தியாவிலும், கென்யாவிலும் பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கு பெற்றதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 2009 மற்றும் 2012-ல் குஜராத்தில் நடைபெற்ற துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டில் கென்யா அளித்த ஆதரவை அவர் நினைவு கூர்ந்தார்.
பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா-கென்யா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த தமது உறுதிப்பாட்டை பிரதமர் தெரிவித்தார்.
திரு ஒடிங்கா நல்ல உடல் நலத்துடன் திகழவும், வருங்கால முயற்சிகளில் வெற்றி பெறவும் பிரதமர் மோடி, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
*********
(Release ID: 1798080)
Visitor Counter : 155
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam