பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு சி ஜங்கா ரெட்டி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2022 12:07PM by PIB Chennai
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு சி ஜங்கா ரெட்டி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“திரு சி ஜங்கா ரெட்டி அவர்கள் மக்கள் சேவைக்குத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஜனசங்கம் மற்றும் பிஜேபியை வெற்றியின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளில் அவர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தவர். ஏராளமான மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பெற்றுள்ளார். ஏராளமான செயற்பாட்டாளர்களுக்கும் அவர் உந்துசக்தியாக விளங்கினார். அவரது மறைவால் துயரடைந்துள்ளேன்.
பிஜேபியின் பயணப்பாதையில் மிகவும் முக்கியமான கட்டத்தில் அதன் தீவிர குரலாகத் திகழ்ந்தவர் திரு சி ஜங்கா ரெட்டி அவர்கள். அவரது மகனிடம் பேசி இரங்கலைத் தெரிவித்தேன். ஓம் சாந்தி”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1795750)
வருகையாளர் எண்ணிக்கை : 230
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam