நிதி அமைச்சகம்
‘அமிர்த காலத்தின்’ போது பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முன்னோடியான மகளிர் சக்தி
Posted On:
01 FEB 2022 1:06PM by PIB Chennai
இந்தியா@100-ஐ நோக்கிய 25 ஆண்டு காலத்தின் போது நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முன்னோடியாக மகளிர் சக்தி அடையாளம் காணப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியா@100-க்கான தொலைநோக்குப் பார்வையை தமது சுதந்திர தின உரையின் போது பிரதமர் வெளியிட்டார்
மகளிர் சக்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களை அரசு விரிவாக மறுசீரமைத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பலன்களை வழங்குவதற்காக மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா, சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 ஆகிய திட்டங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை அங்கன்வாடிகளான சாக்ஷம் அங்கன்வாடிகளில் சிறப்பான உள்கட்டமைப்பு மற்றும் ஒலி-ஒளி உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டு தூய்மையான எரிசக்தி வசதி அளிக்கப்பட்டு, ஆரம்பகால குழந்தை மேம்பாட்டிற்கான முன்னேறிய சூழலியலை அவை வழங்கும். இரண்டு லட்சம் அங்கன்வாடிகள் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794149
***
(Release ID: 1794288)
Visitor Counter : 342
Read this release in:
Manipuri
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam