உள்துறை அமைச்சகம்
2022, குடியரசு தினத்தையொட்டி வீரதீரச் செயலுக்கான பதக்கங்கள்/சேவைப் பதக்கங்கள் அறிவிப்பு
Posted On:
25 JAN 2022 10:50AM by PIB Chennai
2022-ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, மொத்தம் 933 காவல்துறையினருக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட உள்ளது. விருதுபெறுவோர் எண்ணிக்கை விவரம் வருமாறு :
வீரதீரச் செயலுக்கான பதக்கங்கள்
பதக்கங்களின் பெயர்
|
பதக்கம் பெறுவோர் எண்ணிக்கை
|
வீரச் செயலுக்கான காவலர் பதக்கம் (PMG)
|
189
|
வீரதீரச் செயலுக்கான பதக்கங்கள்
பதக்கங்களின் பெயர்
|
பதக்கம் பெறுவோர் எண்ணிக்கை
|
தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் (PPM)
|
88
|
தகுதிமிக்க சேவைக்கான காவலர் பதக்கம் (PM)
|
662
|
வீர தீரச் செயலுக்கான பதக்கம் பெறும் 189 பேரில், 134 பேர், ஜம்மு & காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீரச்செயல் புரிந்தமைக்காக 47 பேருக்கும், வடகிழக்கு பிராந்தியத்தில் வீரச்செயல் புரிந்தமைக்காக ஒருவருக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கம் பெறுவோரில் 115 பேர் ஜம்மு & காஷ்மீர் காவல்துறையையும், 39 பேர் மத்திய ரிசர்வ் காவல் படையையும்(சி.ஆர்.பி.எப்.), 3 பேர் இந்தோ-திபெத்திய எல்லைக்காவல் படையையும், 2 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையையும், 3 பேர் சஹஸ்ர சீமா பால் படையையும், 10 பேர் சத்திஸ்கர் காவல்துறையையும், 9 பேர் ஒடிசா காவல்துறையையும், 7 பேர் மகாராஷ்டிரா காவல் துறையையும், எஞ்சியவர்கள் பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792365
**********
(Release ID: 1792434)
Visitor Counter : 311