பிரதமர் அலுவலகம்
ராணுவ தினத்தன்று இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
15 JAN 2022 9:13AM by PIB Chennai
ராணுவ தினத்தன்று இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ராணுவ தினத்தன்று நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் மதிப்பிற்குரிய அதிகாரிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிறப்பான நல்வாழ்த்துக்கள். இந்திய ராணுவம் அதன் வீரத்திற்கும் தொழில்முறைக்கும் நன்கு அறியப்பட்டதாகும். தேசத்தின் பாதுகாப்புக்கு இந்திய ராணுவத்தின் விலைமதிப்பில்லா பங்களிப்புக்கு வார்த்தைகளால் நீதி வழங்க முடியாது
எதிரிகள் தாக்கக்கூடிய பகுதிகளில் இந்தியா ராணுவ வீரர்கள் பணியாற்றுகிறார்கள். இயற்கைச் சீற்றங்கள் உட்பட மனிதகுலத்திற்கு நெருக்கடிகள் ஏற்படும்போது சக மக்களுக்கு உதவி செய்ய முன்னணியில் இருக்கிறார்கள். அதே போல் வெளி நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறந்த பங்களிப்பு இந்தியாவுக்குப் பெருமிதம் அளிக்கிறது."
****
(रिलीज़ आईडी: 1790100)
आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam