பிரதமர் அலுவலகம்
தகுதி வாய்ந்த அனைவரும் கொவிட் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பிரதமர் வேண்டுகோள்
Posted On:
10 JAN 2022 10:19PM by PIB Chennai
இந்தியாவில் முன்னெச்சரிக்கை தவணை கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், தகுதி வாய்ந்த அனைவரும் இந்த முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொள்ளுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி, வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் (10.01.2022) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;
“இந்தியா, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாராட்டுக்கள். தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நாம் அனைவரும் அறிந்தபடி, தடுப்பூசி மட்டுமே கொவிட்-19-ஐ முறியடிக்கக்கூடிய வலுவான ஆயுதம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாராட்டுக்கள். தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நாம் அனைவரும் அறிந்தபடி, தடுப்பூசி மட்டுமே கொவிட்-19-ஐ முறியடிக்கக்கூடிய வலுவான ஆயுதம் -
Narendra Modi(@narendramodi)January10, 2022
|
-----
(Release ID: 1789139)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam