பிரதமர் அலுவலகம்
கொவிட் தடுப்பூசி இயக்கத்தின் 150 கோடி என்ற மைல்கல்லை கடந்திருப்பதற்காக நாட்டு மக்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
07 JAN 2022 9:41PM by PIB Chennai
கொவிட் தடுப்பூசி இயக்கத்தின் 150 கோடி என்ற மைல்கல்லை கடந்திருப்பதற்காக நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நமது தடுப்பூசி இயக்கத்தை வெற்றிபெறச் செய்வதற்கு பணியாற்றிய அனைவருக்கும் இந்தியா மதிப்பளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தடுப்பூசி இயக்கத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நாளாகும்! 150 கோடி என்ற மைல்கல்லை கடந்ததற்காக நமது நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். நமது தடுப்பூசி இயக்கம் பலரின் வாழ்க்கை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்துள்ளது. அதே நேரம் கொவிட்-19 தொடர்பான அனைத்து கட்டுப்பாட்டு விதிகளையும் நாம் தொடர்ந்து பின்பற்றுவோம்.
நமது தடுப்பூசி இயக்கத்தை வெற்றிபெறச் செய்வதற்கு பணியாற்றிய அனைவருக்கும் இந்தியா மதிப்பளிக்கிறது. நமது மருத்துவர்கள், விஞ்ஞானிகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு நாம் நன்றி செலுத்துவோம். தகுதியுள்ள அனைவரும் தங்களுக்கான டோஸ்களை எடுத்துக்கொள்ள நான் வலியுறுத்துகிறேன். ஒன்றிணைந்து கொவிட்-19-ஐ எதிர்த்து நாம் போராடுவோம்”.
**************
(रिलीज़ आईडी: 1788532)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam