சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 : கட்டுக்கதைகளும் உண்மையும்


அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் கோவேக்சின் தடுப்பூசி இடம்பெறாதபோதிலும், 15-18 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி செலுத்துவதற்குரிய வழிகாட்டு நெறிமுறையில் அந்தத் தடுப்பூசி இடம்பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் திசைதிருப்பக்கூடியவை ஆகும்

Posted On: 07 JAN 2022 10:43AM by PIB Chennai

15-18 வயதுடையவர்களுக்கு அவசரத் தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெறாத போதிலும், 15-18 வயதுடையவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டருப்பதாக, சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  இதுபோன்ற செய்திகள், முற்றிலும் தவறானவை, திசை திருப்பக்கூடியவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை. 

வழிகாட்டுநெறிமுறைகள், மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.  இந்த நெறிமுறைகளில் எந்த இடத்திலும், உலக சுகாதார நிறுவனத்தின் அவசரத் தேவைகளுக்கான பட்டியல் குறித்து குறிப்பிடப்படவில்லை.  மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சகத்தால் 27 டிசம்பர் 2021-ல் வெளியிடப்பட்ட நெறிமுறைகளில், “15-18 வயதுடைய புதிய பயனாளிகள்” என்ற தலைப்பில், துணைத்தலைப்பு (e) பக்கம்-4ல் “15-18 வயதுடையவர்களுக்கான அவசரப் பயன்பாட்டிற்கான பட்டியலில் கோவேக்சின் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், அதுபோன்ற பயனாளிகளுக்கு, இந்த மருந்து ஒன்று தான் உள்ளது” என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அவசரப் பயன்பாட்டுக்கான பட்டியலில், 12-18வயதுடையவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த, 24 டிசம்பர் 2021 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  அதன் தொடர்ச்சியாக, 15-18வயதுடையவ இளைஞர்களுக்கான தடுப்பூசி மற்றும் அடையாளம் காணப்பட்ட இதர பிரிவினருக்கான முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய சுகாதார அமைச்சகத்தால், 27 டிசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.  இவை அனைத்தையும் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம்- https://www.mohfw.gov.in/pdf/GuidelinesforCOVID19VaccinationofChildrenbetween15to18yearsandPrecautionDosetoHCWsFLWs&60populationwithcomorbidities.pdf

   ***************


(Release ID: 1788301) Visitor Counter : 203