பிரதமர் அலுவலகம்
போபாலில் மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்பணிக்கவுள்ளார்
உஜ்ஜெயினிலிருந்து இந்தூர் வரை இரண்டு புதிய மின்சார ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
மத்தியப் பிரதேசத்தில் ரயில்வேத்துறையின் பல திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்
प्रविष्टि तिथि:
14 NOV 2021 4:07PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்துக்கு நாளை(நவம்பர் 15ம்தேதி) செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயல் நிலையத்தை மாலை 3 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
இந்த மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையத்துக்கு கோண்ட் ராஜ்ஜியத்தின் ராணி கமலாபதியின் பெயர் வைக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் மத்தியப் பிரதேசத்தில், உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையம் ஆகும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், பசுமை கட்டிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையம் ஒருங்கிணைந்த பன்நோக்கு போக்குவரத்து மையமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், உஜ்ஜெயின் முதல் பஃதேஹாபாத் சந்திராவதிகன்ச் வரை அகல ரயில் பாதை மற்றும் மின்பாதை திட்டம்,போபால் - பர்கேரா வழித்தடத்தில் 3வது ரயில் பாதை திட்டம், மதேலா -நிமர் கேரி வழித்தடத்தல் அகல்பாதை மற்றும் மின்பாதை திட்டம், குணா-குவாலியர் வழித்தடத்தில் மின்மயமாக்க திட்டம் உட்பட மத்தியப் பிரதேசத்தில் ரயில்வேயின் பல திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். உஜ்ஜெயின்-இந்தோர் மற்றும் இந்தோர் - உஜ்ஜெயின் இடையே இரண்டு புதிய மின்சார ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
****
(रिलीज़ आईडी: 1771715)
आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam