பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவின் 1.47 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நவம்பர் 14-ந் தேதி பிஎம்ஏஒய்-ஜி-யின் முதல் தவணையை பிரதமர் விடுவிக்கிறார்

प्रविष्टि तिथि: 13 NOV 2021 5:11PM by PIB Chennai

பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் முதல் தவணையை திரிபுராவின் 1.47 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 2021 நவம்பர் 14-ந் தேதி பகல் 1 மணியளவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி மூலம் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.700 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.

திரிபுராவின் தனித்துவமான புவி பருவ நிலையைக் கருத்தில் கொண்டு, பிரதமர் தலையீட்டின் பேரில் மாநிலத்தில் ஏராளமான பயனாளிகள் வசித்து வரும் பிரத்யேகமான  குச்சாவீடுகளை ‘பக்கா’ வீடுகளாக மாற்ற இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர், திரிபுரா முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

***


(रिलीज़ आईडी: 1771469) आगंतुक पटल : 251
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam