பிரதமர் அலுவலகம்
சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு அமெரிக்காவை வரவேற்ற பிரதமர்
Posted On:
10 NOV 2021 10:50PM by PIB Chennai
சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் அமெரிக்கா இணைவதை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்த முடிவை மேற்கொண்டதற்காக அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடனுக்கு திரு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்திற்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு பிரதிநிதி திரு ஜான் கெர்ரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்:
“பருவநிலை தூதரிடமிருந்து சிறப்பான செய்தி! அமெரிக்க அதிபருக்கு நான் நன்றி தெரிவிப்பதுடன், சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு அமெரிக்காவை முழு மனதுடன் வரவேற்கிறேன். பூமியின் நிலைத்தன்மைக்கு சூரியசக்தியைப் பயன்படுத்துவது என்ற இருநாடுகளின் முடிவை இது மேலும் வலுப்படுத்தும்”.
-----
(Release ID: 1771163)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam