பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
இந்திய பருத்தி ஆணையத்திற்கு (சிசிஐ) 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு ரூ.17,408.85 கோடி விலை ஆதரவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
10 NOV 2021 3:44PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு, இந்திய பருத்தி ஆணையத்திற்கு (சிசிஐ) ரூ.17,408.85 கோடிக்கான உறுதியான விலை ஆதரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (30.09.2021 வரை).
பருத்தி விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பருத்தியின் விலை ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானது என்பதால், 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அமலாக்கம், நாட்டின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் பருத்தி விவசாயிகளை உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்துகிறது. விலை ஆதரவு நடவடிக்கைகள் பருத்தி விலையை நிலைப்படுத்தவும் விவசாயிகளின் துயரத்தைப் போக்கவும் உதவுகின்றன.
பருத்தி மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாகும் என்பதோடு, சுமார் 58 லட்சம் பருத்தி விவசாயிகள், பருத்தி பதப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் போன்ற பருத்தி தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 400 முதல் 500 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பருத்தி பருவம் 2020-21 இல், பருத்தி சாகுபடியின் பரப்பளவு 133 லட்சம் ஹெக்டேராக இருந்ததுடன், 360 லட்சம் பொதிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உலகளாவிய பருத்தி உற்பத்தியில் 25% ஆகும். விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய அரசு விதை பருத்திக்கு (கபாஸ்) குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசு, பருத்தி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை, மத்திய நோடல் ஏஜென்சியாக நியமித்ததுடன், குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டத்திற்கு கீழே பருத்தி விலை குறையும் போது, அனைத்து நியாயமான சராசரி தரம் (FAQ) பருத்தியையும் விவசாயிகளிடமிருந்து எந்தவித தர அளவும் இல்லாமல் கொள்முதல் செய்வதன் மூலம், பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்திய பருத்தி கார்ப்பரேஷன் லிமிடெட் பொறுப்பேற்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கைகள் பருத்தி விவசாயிகளை எந்தவொரு துயரமான விலைச் சூழ்நிலையிலும் பாதகமான விற்பனையிலிருந்து பாதுகாக்கின்றன.
குறைந்தபட்ச ஆதரவு விலை செயல்பாடுகள், இயற்கையில் இறையாண்மையாக செயல்படுவதுடன், தற்சார்பு இந்தியாவுக்கு உதவி செய்யும் வகையில், நூற்புத் தொழிலுக்கான மூலப்பொருளான தரமான பருத்திக்காக, பருத்தி சாகுபடியில் அவர்களுடைய ஆர்வத்தை நிலையாக தக்கவைக்க, நாட்டின் பருத்தி விவசாயிகளை ஊக்குவிக்கிறது. பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், அதன் உள்கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருப்பதால், பருத்தி வளரும் பெரிய 11 மாநிலங்களில், 143 மாவட்டங்களில் 474 கொள்முதல் மையங்களைத் திறக்கிறது.
உலகளாவிய தொற்றுநோய் நெருக்கடி காலங்களில், கடந்த இரண்டு பருத்தி பருவங்களில் (2019-20 மற்றும் 2020-21), CCI நாட்டின் பருத்தி உற்பத்தியில் 1/3ல் அதாவது, சுமார் 200 லட்சம் பேல்களை கொள்முதல் செய்து ரூ.55,000/- கோடிக்கு மேல் 40 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைத்தது.
தற்போதைய பருத்தி பருவத்தில் அதாவது 2021-022, CCI ஆனது 11 பெரிய பருத்தி வளரும் மாநிலங்களிலும் 450 க்கும் மேற்பட்ட கொள்முதல் மையங்களில் மனித ஆற்றலைப் பயன்படுத்துதல் உட்பட, குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கைகளின் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க போதுமான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்துள்ளது.
****************
(Release ID: 1770602)
Visitor Counter : 288
Read this release in:
Marathi
,
Gujarati
,
Malayalam
,
Kannada
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Telugu