பிரதமர் அலுவலகம்
கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி –நேபாள பிரதமர் சந்திப்பு
Posted On:
02 NOV 2021 8:02PM by PIB Chennai
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2, 2021 அன்று நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் திரு.ஷேர் பகதூர் டியூபாவும் சந்தித்து பேசினர்.
2. கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக நடந்து வரும் முயற்சிகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவது, எல்லைகளைத் தாண்டி சரக்குகளின் தடையற்ற பரிமாற்றத்தை உறுதி செய்வது உட்பட கொரோனா நோய் தொற்று காலங்களின்போது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேசினர். தொற்று நோய்க்குப் பிந்தைய மீட்சி சமயத்திலும் நெருக்கமாக பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
3.இந்த ஆண்டு ஜூலை மாதம் நேபாளத்தின் பிரதமராக திரு டியூபா பதவியேற்றபோது, நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, பிரதமர் டியூபா மற்றும் பிரதமர் மோடி இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.
***
(Release ID: 1769130)
Visitor Counter : 175
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam