பிரதமர் அலுவலகம்
100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
Posted On:
21 OCT 2021 10:01PM by PIB Chennai
100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பூடான் பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர்;
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்விற்காக நீங்கள் வெளியிட்ட கனிவான வார்த்தைகளுக்கு “நன்றி லியோன்சென் டாக்டர்.லோடே ஷெரிங்.
பூடானுடான எங்களது நட்புறவை நாங்கள் வெகுவாக போற்றுகிறோம்!
கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில், தெற்காசிய பிராந்தியம் மற்றும் உலக நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற உறுதிப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.”
இலங்கை அதிபர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர்;
“எனது நண்பர் அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி. குஷிநகருக்கு இலங்கையிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்தை தொடங்கியது உள்ளிட்ட சமீபத்திய முன்முயற்சிகள் மற்றும் நமது பரஸ்பர தடுப்பூசி இயக்கங்களும் நமது பன்முக நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன் நமது சகோதர மக்களிடையேயான கலந்துரையாடல்களை மேம்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர்;
“உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அதிபர் இபுசோலிஹ்.
மாலத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி செலுத்தும் பணியின் முன்னேற்றத்தை நான் கவனித்து வருகிறேன்.
அண்டை நாடுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என்ற முறையில் கொவிட்-19-ஐ எதிர்கொள்வதற்கான நமது ஒத்துழைப்பு நல்ல பலனை அளித்துள்ளது”
இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர்;
“நன்றி பிரதமர் நஃப்தாலிபென்னட். உங்களது அன்பான வார்த்தைகளுக்கு பாராட்டுகள். இந்திய விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், புதுமைக் கண்டுபிடிப்பாளர்களால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. இவர்கள் இஸ்ரேலிய சகாக்களுடன் இணைந்து நமது அறிவாற்றல் அடிப்படையிலான நீடித்த ஒத்துழைப்புகளை உருவாக்கி உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மலாவி அதிபர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர்;
100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை கடந்ததற்காக இந்தியாவுக்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு நன்றி மேதகு லாசரஸ் சாக்வேரா.
பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தடுப்பூசி கிடைக்கச் செய்வது மிக முக்கியமானது. இதில் நாம் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1765801)
Visitor Counter : 178
Read this release in:
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam