பிரதமர் அலுவலகம்
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜாஜர் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக் கட்டியுள்ள விஷ்ரம் சதன் கட்டிடத்தை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
20 OCT 2021 4:15PM by PIB Chennai
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், ஜாஜர் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக் கட்டியுள்ள விஷ்ரம் சதன் கட்டிடத்தை பிரதமர், அக்டோபர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதன்பின் அவர் உரையாற்றுகிறார்.
806 படுக்கை வசதிகள் கொண்ட விஷ்ரம் சதன் கட்டிடத்தை இன்ஃபோசிஸ் அறக்கட்டளை, பெருநிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் கட்டியுள்ளது. இது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் நீண்ட காலம் தங்கி இருப்பவர்களுகக்கு ஏசி வசதியுடன் கூடிய தங்கும் வசதியை அளிக்கிறது. இதை இன்ஃபோசிஸ் அறக்கட்டளை ரூ.93 கோடி செலவில் கட்டியுள்ளது. தேசிய புற்றுநோய் மையத்தின் மருத்துவமனை மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுக்கு அருகே இந்த விஷ்ரம் சதன் கட்டிடம் உள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு மன்சுக் மாண்டவியா, ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால் கத்தார் மற்றும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைத் தலைவர் திருமிகு சுதா மூர்த்தி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர்.
***
(रिलीज़ आईडी: 1765222)
आगंतुक पटल : 282
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam