பிரதமர் அலுவலகம்
குஜராத்தில் உள்ள சூரத்தில் சவுராஷ்டிரா பட்டேல் சேவா சமாஜத்தால் கட்டப்படவுள்ள முதல் கட்ட மாணவர் விடுதியின் பூமிப் பூஜை விழாவில் பிரதமர் பங்கேற்பு
குஜராத் மக்களின் சேவை உணர்வைப் பாராட்டினார்
‘‘சர்தார் படேல் கூறியவற்றை நாம் பின்பற்றி, நாட்டை நாம் நேசிக்க வேண்டும், பரஸ்பர அன்பு மற்றும் ஒத்துழைப்புடன் நமது விதியை உருவாக்க வேண்டும்’’
‘‘பொது உணர்வை எழுப்புவதில் முக்கிய பங்காற்றியத் தலைவர்களை நினைவுக் கூற சுதந்திரத்தின் பொன் விழாக் காலம் நம்மைத் தூண்டுகிறது. அவர்களைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிவது மிக முக்கியம்’’
‘‘நாடு தற்போது தனது பாரம்பரியத் திறமைகளை, நவீனச் சாத்தியங்களுடன் இணைக்கிறது’’
அனைவருடனும், அனைவரது வளர்ச்சி’-ன் சக்தி என்ன என்பதைக் குஜராத்திலிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்’’
‘‘கொரோனாவின் சிக்கலானக் காலத்துக்குப்பின் பொருளாதாரம் வேகத்துடன் திரும்பியுள்ளதால் ஒட்டுமொத்த உலகமும் இந்தியா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது’’
Posted On:
15 OCT 2021 12:05PM by PIB Chennai
குஜராத்தில் உள்ள சூரத்தில் சவுராஷ்டிரா பட்டேல் சேவா சமாஜத்தால் கட்டப்படவுள்ள முதல் கட்ட மாணவர் விடுதியின் பூமிப் பூஜை விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசியப் பிரதமர், குஜராத் மக்களின் உணர்வைப் பாராட்டினார். சமூக முன்னேற்றப் பணியில், குஜராத் எப்போதும் முன்னணியில் இருப்பது தமக்குப் பெருமிதமாக உள்ளதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் சர்தார் படேலை அவர் நினைவு கூர்ந்தார். நாட்டின் வளர்ச்சிப் பணியில், ஜாதி மத பேதம் தடையாக இருக்க கூடாது என அவர் வலியுறுத்தியதை பிரதமர் மேற்கோள் காட்டினார். ‘‘நாம் அனைவரும் இந்தியாவின் புதல்வர்கள் மற்றும் புதல்விகள். நாம் அனைவரும் நமது தேசத்தை நேசிக்க வேண்டும். பரஸ்பர அன்பு மற்றும் ஒத்துழைப்புடன் நமது விதியை வகுக்க வேண்டும்’’ என சர்தார் படேல் கூறியதை பிரதமர் மேற்கோள் காட்டினார்.
சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்தியா தற்போது உள்ளதாக பிரதமர் கூறினார். புதிய தீர்மானங்களுடன், இந்தப் பொன் விழாக் காலம், பொது உணர்வை எழுப்பியதில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களை நினைவுக் கூற நம்மை தூண்டுகிறது. அவர்களைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிந்துக் கொள்வது மிக முக்கியம் என அவர் மேலும் கூறினார்.
வல்லப் வித்யாநகர் பற்றியும் பிரதமர் பேசினார். கல்வியை பரப்புவதற்காகவும், கிராம வளர்ச்சியை தூண்டுவதற்காகவும், இந்த இடம் உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார். குஜராத் முதல்வராக பணியாற்றிய தனது அனுபவத்தை அவர் எடுத்து கூறினார். அரசியல் ஜாதியை பார்க்காத அவர், 2001ம் ஆண்டிலிருந்து குஜராத்துக்கு சேவை செய்ய மக்களால் ஆசிர்வதிக்கப்பட்டார். மக்கள் ஆசியின் பலத்தை அவர் புகழ்ந்தார். அதுதான் 20 ஆண்டுக்கும் மேலாக எந்த இடைவெளியும் இல்லாமல் குஜராத் மக்களுக்கும் அதன்பின் ஒட்டு மொத்த நாட்டுக்கும் தொடர்ந்து சேவை செய்ய வைத்தது. முன்பு குஜராத்தில் நல்லப் பள்ளிகள் மற்றும் நல்லக் கல்விக்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவியதை நினைவு கூர்ந்த அவர் , ‘‘அனைவருடனும், அனைவரின் வளர்ச்சி’ என்பதன் சக்தியை குஜராத்திலிருந்துதான் நான் கற்றேன்’’ என அவர் கூறினார். இப்பிரச்னையை தீர்க்க, அவர் மக்களுடன் எவ்வாறு இணைந்திருந்தார் என்பதை பிரதமர் தெரிவித்தார்.
புதியக் கல்வி கொள்கையில், தொழில் கல்விப் படிப்புகளை உள்ளூர் மொழியில் கற்கும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார். தற்போது படிப்புகள் பட்டங்களுடன் முடிவடைவதில்லை, திறமைகளுடனும் இணைக்கபபடுகிறது. நாடு தற்போது, தனது பாரம்பரியத் திறன்களை நவீன சாத்தியங்களுடன் இணைக்கிறது என பிரதமர் கூறினார்.
பெருந்தொற்றையடுத்து, மிகப்பெரிய மீட்பு பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘கொரோனா நெருக்கடி காலத்துக்குப்பின்பு, பொருளாதாரம் வேகத்துடன் திரும்பியதால், ஒட்டுமொத்த உலகமும், இந்தியா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாக பிரதமர் கூறினார். உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா மீண்டும் இருக்கப்போகிறது என சர்வதேச அமைப்பு வலியுறுத்தியுள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்.
குஜராத் முதல்வரை பாராட்டிய பிரதமர், தொழில்நுட்பத்துடனும், கள நிலவரத்துடனும் அவர் இணைந்துள்ளதை பாராட்டினார். ‘‘ பல நிலைகளில் பணியாற்றிய அவரது அனுபவம், குஜராத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என பிரதமர் மேலும் கூறினார்.
***
(Release ID: 1764143)
Visitor Counter : 275
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam