பிரதமர் அலுவலகம்
உலக ஜூனியர் போட்டியில் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
10 OCT 2021 7:28PM by PIB Chennai
16 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 40 பதக்கங்களுடன் உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியின் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நமது துப்பாக்கி சுடும் வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்! 16 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 40 பதக்கங்களுடன் உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியின் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அணிக்கு பாராட்டுகள் மற்றும் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள். பல்வேறு வளர்ந்து வரும் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இந்த வெற்றி ஊக்கமளிக்கும்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
-----
(Release ID: 1762760)
Visitor Counter : 253
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam