பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 31 AUG 2021 6:06PM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் முகங்களிலும் எளிதில் வெல்ல முடியாத புன்னகையை சரத்குமார் தவழச் செய்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் ஏராளமானோருக்கு எழுச்சியூட்டும். அவருக்கு வாழ்த்துகள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

 

-----

 

 


(Release ID: 1750852) Visitor Counter : 194