பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 30 AUG 2021 9:22AM by PIB Chennai

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில்,

“அபராமான விளையாட்டு அவனி லெகாரா @AvaniLekhara!  உங்கள் கடின உழைப்பினால் உங்களுக்குத் தகுதியான தங்கத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் சுறுசுறுப்பான தன்மையினாலும், துப்பாக்கிச் சுடுதல் மீதான உங்கள் ஆர்வத்தின் காரணமாகவுமே இது சாத்தியமானது. இந்திய விளையாட்டுத் துறைக்கு உண்மையிலேயே இது ஒரு சிறப்பான தருணம். உங்களது எதிர்கால முயற்சிகள்  வெற்றி பெற  வாழ்த்துகிறேன். #Paralympics", என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

 

****


(रिलीज़ आईडी: 1750341) आगंतुक पटल : 289
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam