பிரதமர் அலுவலகம்

நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி: பிரதமர்

प्रविष्टि तिथि: 14 AUG 2021 6:54PM by PIB Chennai

நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் டிவிட்டர் பதிவுகளுக்கு பதிலளித்த பிரதமர், "நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி. இயற்கை சூழல் மிகுந்த இடங்களை பாதுகாப்பது, செடி, கொடிகளின் பாதுகாப்பு மீது கவனம் செலுத்துவது மற்றும் பசுமையான பூமியை கட்டமைப்பது ஆகியவற்றில் நூற்றாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும் விழுமியங்களை இது மீண்டும் ஒரு முறை எடுத்துரைக்கிறது," என்று கூறியுள்ளார்.

 *****************


(रिलीज़ आईडी: 1745915) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam