தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தகவல் & ஒலிபரப்பு அமைச்சகத்தின் சுதந்திர தின கொண்டாட்டம்: தூர்தர்ஷன் மற்றும் வானொலியில் நாள் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்

Posted On: 13 AUG 2021 3:00PM by PIB Chennai

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தில் அதிகம் பேர் கலந்து கொள்வதை உறுதி செய்வதற்கும், விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், ‘மக்கள் பங்களிப்பு மற்றும் மக்கள் இயக்கத்தின்முழு உணர்வோடு பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. புதிய இந்தியாவை நோக்கிய பயணத்தில் தியாகம் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றை நினைவுக்கூர்ந்து மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பல்வேறு முறைகள் மற்றும் ஊடகங்களில் நாடு முழுவதும் நிகழ்ச்சிகளுக்குக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்கள் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுக் கூறும் வகையில் அமைந்திருப்பது ஒன்றிணைந்த நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆசாதி கா சஃபர் ஆகாசவாணி கே சாத்எனும் நிகழ்ச்சியை 2021 ஆகஸ்ட் 16 முதல் தேசிய மற்றும் பிராந்திய அலைவரிசைகளில் அகில இந்திய வானொலி தொடங்கவுள்ளது. தினமும் காலை 8.20 மணிக்கு இந்தியிலும், 8.50 மணிக்கு ஆங்கிலத்திலும் ஒலிபரப்பாகவுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த இந்த ஐந்து நிமிட நிகழ்ச்சியில், அந்தந்த தினத்தில் நடைபெற்ற முக்கிய வரலாற்று மற்றும் அரசியல் சிறப்புமிக்க நிகழ்வுகள் நினைவுக் கூறப்படும். மக்கள் பங்களிப்பின் உணர்வை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், ‘தேசிய மற்றும் பிராந்திய அம்ரித் மகோத்சவ வினாடி வினாநிகழ்ச்சியையும் ஆகஸ்ட் 16 முதல் அகில இந்திய வானொலி (இந்தி: காலை 8 மணி முதல் 8.30 மணி வரை, ஆங்கிலம் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை) ஒலிபரப்பவுள்ளது.

அந்தந்த தினத்தில் நடைபெற்ற முக்கிய வரலாற்று மற்றும் அரசியல் சிறப்புமிக்க நிகழ்வுகளை நினைவுக் கூறும் ஐந்து நிமிட தினசரி நிகழ்ச்சி ஒன்றை 2021 ஆகஸ்ட் 16 முதல் தூர்தர்ஷன் ஒளிபரப்பவுள்ளது. டிடி நியூஸ் அலைவரிசையில் காலை 8.55 மணிக்கும் டிடி இந்தியா அலைவரிசையில் காலை 8.30 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

தேசபக்தி மற்றும் தியாக உணர்வை எடுத்துரைக்கும் திரைப்படங்களையும் தூர்தர்ஷன் ஒளிபரப்பவுள்ளது. இந்துஸ்தான் கி கசம் மற்றும் திரங்கா ஆகிய திரைப்படங்கள் 2021 ஆகஸ்ட் 1 அன்று ஒளிபரப்பாகும். புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்), ராணுவம், விண்வெளி மற்றும் முக்கிய சட்டங்கள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. செங்கோட்டையில் இருந்து நேரலை, சிறப்பு நிகழ்ச்சிகள் என நாள் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்பவுள்ளது.

காந்தி, மேகிங் ஆஃப் மகாத்மா, கரே பைரே உள்ளிட்ட திரைப்படங்களை தனது ஓடிடி தளமான www.cinemasofindia.com-ல் 2021 ஆகஸ்ட் 15 முதல் 17 வரை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஒளிபரப்பவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745414

*****************(Release ID: 1745533) Visitor Counter : 451