பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                
                    
                    
                        இன்று அறிமுகமாகும் வாகனக் கழிவு கொள்கை இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்: பிரதமர்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                13 AUG 2021 11:35AM by PIB Chennai
                
                
                
                
                
                
                இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில், இன்று தொடங்கப்பட்டுள்ள வாகனக் கழிவு கொள்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். 
இது தொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்திகளில் கூறியுள்ளதாவது :
"வாகன கழிவுக் கொள்கை இன்று தொடங்கப்பட்டது, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். குஜராத்தில் நடைபெறும் முதலீட்டாளர் உச்சி மாநாடு, வாகனக் கழிவு உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கான புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்க உள்ளது. இந்தத் திட்டத்தில் சேருமாறு, இளைஞர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
வாகனத்தை அகற்றுவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பொருத்தமற்ற மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை வெளியேற்ற உதவும். சாத்தியமான சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குவதோடு, சுற்றுச்சூழல் பொறுப்புடன் அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை ஏற்படுத்துவதுதான் நமது இலக்காகும். "
                
                
                
                
                
                (Release ID: 1745366)
                Visitor Counter : 345
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam