பிரதமர் அலுவலகம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 07 AUG 2021 6:00PM by PIB Chennai

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

டோக்கியோவில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது! நீரஜ் சோப்ரா இன்று மேற்கொண்டுள்ள சாதனை, என்றென்றும் நினைவுக்கூரப்படும். இளம் நீரஜ், மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடினார். தங்கப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்.

*****************(Release ID: 1743630) Visitor Counter : 171