பிரதமர் அலுவலகம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு உள்ளூர் கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்


இந்தியாவின் எண்ணற்ற நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத் திறனை கைத்தறிகள் வெளிப்படுத்துகின்றன: பிரதமர்

Posted On: 07 AUG 2021 1:36PM by PIB Chennai

இந்தியாவின் எண்ணற்ற நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின்  பன்முகத்தன்மை மற்றும் கைவினைத் திறனை கைத்தறிகள் வெளிப்படுத்துவதாகக் கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி உள்ளூர் கைவினைப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

இந்தியாவின் எண்ணற்ற நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத் திறனை கைத்தறிகள் வெளிப்படுத்துகின்றன. எனது கைத்தறி, எனது பெருமை என்ற உணர்ச்சியை மேம்படுத்தும் வகையில் நமது நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் தருணமாக தேசிய கைத்தறி தினம் விளங்குகிறது. உள்ளூர் கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிப்போம்!என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் சுட்டுரைச் செய்தியை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தி பின்வருமாறு:

கடந்த சில ஆண்டுகளில் கைத்தறிகள் மீதான ஆர்வம் புத்துயிர் பெற்றுள்ளது. எனது கைத்தறி, எனது பெருமையின் உணர்வுக்கு மீராபாய் சானு ஆதரவளிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் கைத்தறித்துறை தொடர்ந்து பங்களிக்கும் என்பதை நான் நம்புகிறேன்”.

*****************



(Release ID: 1743568) Visitor Counter : 180