பிரதமர் அலுவலகம்
விமானம் தாங்கி கப்பல் `விக்ராந்த்’தின் முதல் கடல் பயணம் : இந்திய கடற்படைக்கும், கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கும் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
04 AUG 2021 9:01PM by PIB Chennai
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான 'விக்ராந்தின்' முதல் கடல் பயணத்திற்காக, இந்திய கடற்படை மற்றும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) இயக்கத்துக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் கூறினார்.
இது தொடர்பாக, சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் கூறியதாவது :
"இந்திய கடற்படையின் வடிவமைப்பு குழுவால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான 'விக்ராந்த்' இன்று அதன் முதல் கடல் பயணத்தை மேற்கொண்டது. இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) இயக்கத்துக்கு இது ஓர் அருமையான உதாரணம்".
(रिलीज़ आईडी: 1742608)
आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam