பிரதமர் அலுவலகம்
பூப்பந்து வீரர் திரு.நந்து நடேகரின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUL 2021 11:50AM by PIB Chennai
பூப்பந்து வீரர் திரு.நந்து நடேகரின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் திரு.நந்து நடேகருக்கு சிறப்பான இடம் உண்டு. அவர் மிகச் சிறந்த பூப்பந்து வீரராகத் திகழ்ந்தார். சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினார். அவரது வெற்றி, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. அன்னாரது மறைவினால் துயருற்றேன். இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது எண்ணங்கள் துணை நிற்கின்றன. ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1739776)
வருகையாளர் எண்ணிக்கை : 256
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam