பிரதமர் அலுவலகம்

பிகாரின் முன்னேற்றத்திற்கு தேவையான தொடர்பு வசதியை மேம்படுத்தியுள்ள தர்பங்கா விமான நிலையம் குறித்து பிரதமர் மகிழ்ச்சி

प्रविष्टि तिथि: 23 JUL 2021 7:41PM by PIB Chennai

பிகாரின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் வகையில் உருவாகி இருப்பதற்காகவும், தொடர்பு வசதியை மேம்படுத்தி இருப்பதற்காகவும் தர்பங்கா விமான நிலையம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தனது தந்தையுடன் முதல் முறையாக விமானத்தில் பயணிப்பதாக தெரிவித்த டிவிட்டர் பயனர் ஒருவரின் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர், “இதை அறிந்துகொள்வதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்! விமான போக்குவரத்து துறையை பொருத்த வரையில், தொடர்பு மற்றும் வசதிகளை மேம்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

பிகார் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வகையில் தர்பங்கா விமான நிலையம் உருவாகி உள்ளது,” என்று கூறியுள்ளார்.

 

-----


(रिलीज़ आईडी: 1738359) आगंतुक पटल : 330
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam