பிரதமர் அலுவலகம்

லோகமானிய திலகரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு புகழாரம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUL 2021 9:54AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அரும்பெரும் தலைவரான லோகமானிய திலகரின் பிறந்த நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் தனது தொடர்ச்சியான சுட்டுரைச் செய்திகளில் கூறியுள்ளதாவது :

"அரும்பெரும் தலைவரான லோகமானிய திலகரின் பிறந்த நாளில் அன்னாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 130 கோடி இந்தியர்கள், பொருளாதார ரீதியாக வளமான மற்றும் சமூக ரீதியாக முற்போக்கான தற்சார்பு பாரதத்தை உருவாக்க முடிவு செய்துள்ள தற்போதைய சூழ்நிலைகளில், முன்னெப்போதையும் விட அவரது எண்ணங்களும் கொள்கைகளும் மிகவும் பொருத்தமானவை.

லோகமானிய திலகர், இந்திய விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அவரது கருத்துக்கள் தொடர்ந்து பலரை ஊக்குவிக்கின்றன. அவர் ஒரு நிறுவன கட்டமைப்பாளராக இருந்தார், பல உயர்தர நிறுவனங்களை வளர்த்து வந்தார், அவை பல ஆண்டுகளாக முன்னோடி வேலைகளைச் செய்தன."

 


(வெளியீட்டு அடையாள எண்: 1738004) வருகையாளர் எண்ணிக்கை : 289